கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து, அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த கும்பலை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.அதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரத்தில், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலருக்கும் தொடர்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ள பல முக்கிய பிரமுகர்களை காப்பற்ற அரசு இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டது.
பொள்ளாச்சி குறித்து கேட்ட கிரிக்கெட் வீரர் அஸ்வினை கிழித்த ரசிகர்கள்! - arrest
சென்னை: பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து எதுவும் தெரியாதது போன்று டிவிட்டரில் கேள்வியெழுப்பிய இந்திய கிரிக்கெட் வீரரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான அஸ்வின் மீது அவரது ரசிகர்கள் வார்த்தை போர் தொடுத்துள்ளனர்.
மேலும், இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதிலும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாடலாசிரியர் விவேகா, நடிகர் சத்யராஜ், உள்ளிட்டோரும் சமூக வலைதளத்தில் குற்றவாளிகளுக்கு தண்டணை வழங்கும்படி கருத்துக்களை பதிவிட்டனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் ஆடி வரும் தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர், பொள்ளாச்சி போராட்டம்? பொள்ளாச்சியில் என்ன நடக்குதுன்னு யாராது சொல்ல முடியுமா? என்று தனக்கு எதுவுமே தெரியாதது போல் கேள்வி எழுப்பியுள்ளார்.பொள்ளாச்சி பிரச்சனை மக்கள் மத்தியில் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், அஸ்வின் இதுபோன்று பதிவிட்டதற்கு அவரது ரசிகர்கள் பலரும் அவரை திட்டி கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.