தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மாதத்தின் சிறந்த வீரருக்கான விருதை பெற்றார் அஸ்வின்! - ஜோ ரூட்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த விருதை இந்திய சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தட்டிச்சென்றார்.

Ashwin named ICC Men's Player of the Month for Feb, Beaumont bags women's award
Ashwin named ICC Men's Player of the Month for Feb, Beaumont bags women's award

By

Published : Mar 9, 2021, 4:00 PM IST

இங்கிலாந்து அணிக்கெதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்றன. இதில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் பிப்ரவரி மாதத்தில் மட்டும் 24 விக்கெட்டுகளை எடுத்ததுடன், 176 ரன்களையும் குவித்து அசத்தியிருந்தார்.

இதனால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மாதாந்திர சிறந்த வீரருக்கான விருதுக்கு அஸ்வினின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. மேலும் இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸின் அறிமுக வீரர் கெய்ல் மேயர்ஸ் ஆகியோரது பெயர்களும் பரிந்துரைசெய்யப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் மகளிர் பிரிவில் இங்கிலாந்தின் டாமி பியூமண்ட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அதிரடியாக விளையாடி இந்திய அணி தொடரை வெல்ல காரணமாக இருந்த ரிஷப் பந்த்திற்கு, ஜனவரி மாதத்திற்கான ஐசிசி மாதத்தின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:எஸ்சிஜி மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலை

ABOUT THE AUTHOR

...view details