தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

’அஷ்வின், ஜடேஜா இருவரையும் எதிர்கொள்வது கடினம்' - மேத்யூ வேட் - இந்தியா vs ஆஸ்திரெலியா

இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோரை எதிர்கொள்வது கடினமான ஒன்று என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட் தெரிவித்துள்ளார்.

Ashwin and Jadeja tough spin duo to face, but Smith will be fine, says Wade
Ashwin and Jadeja tough spin duo to face, but Smith will be fine, says Wade

By

Published : Jan 3, 2021, 3:44 PM IST

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி தற்போது பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரின் நான்காவது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வருகிற ஜன.,07ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் மெல்போர்னில் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பயிற்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மேத்யூ வேட், “இந்திய அணியின் அஷ்வின், ஜடேஜா இருவரும் மிகச்சிறப்பாக பந்து வீசினர் என்று நினைக்கிறேன். குறிப்பாக மெல்போர்னில் அவர்கள் பந்துவீசும்போது அதிக ஸ்பின், பவுன்ஸ் இருந்தது. அதனால் அவர்களின் பந்துவீச்சை எதிர்கொள்வது எங்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது.

அதேசமயம் இந்த சீசனில் ஸ்டீவ் ஸ்மித், அஷ்வினின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறார். இதற்கு முன் அவர் பலமுறை அஷ்வினை எதிர்கொண்டுள்ளார். ஆனால் இந்த சீசனில் அது அவருக்கு பலனளிக்கவில்லை. சிட்னி மைதானத்தில் ஸ்மித் சிறப்பாக செயல்படுவார் என்றுதான் எதிர்பார்க்கிறோம். இருப்பினும் அஷ்வின் மற்றும் ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க நாங்கள் ஏதேனும் வழியை கண்டுபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:சவுரவ் கங்குலியின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்

ABOUT THE AUTHOR

...view details