ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 1ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இதில் நடப்பு உலகக்கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து அணியும், 5 முறை உலகக்கோப்பை சாம்பியனுமான ஆஸ்திரேலியா அணியும் மோதவுள்ளன.
இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்ட நிலையில், ஆஸ்திரேலிய அணி வீரர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் பட்டின்சன் மூன்று வருடங்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளார். இவர், இதற்கு முன் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார்.
அதுபோல பந்தை சேத படுத்தியதற்கான ஒரு வருட தடைக்கு பிறகு நட்சத்திர வீரர்களான ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் மற்றும் கேமரூன் பான்கிராப்ட் ஆகியோர் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதற்கு முன் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ஸ்மித் மற்றும் வார்னர் இடம்பெற்றனர்.
ஆஷஸ் தொடரிலிருந்து ஐசிசியின் டெஸ்ட் போட்டிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடங்க இருப்பதால், தனது ஆதிக்கத்தை செலுத்தும் முனைப்பில் டெஸ்ட் அணியில் ஸ்மித், வார்னர், பாட்டின்சனை அணியில் சேர்த்துள்ளது ஆஸ்திரேலிய அணி.
ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:
டிம் பெயின் (கேப்டன்), டேவிட் வார்னர், கேமரூன் பான்கிராப்ட், ஸ்டீவன் ஸ்மித், பேட்ரிக் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபூசாக்னே, நாதன் லியோன், மிட்செல் மார்ஷ், மைக்கேல் நேசர், ஜேம்ஸ் பாட்டின்சன், பீட்டர் சிடில், மிட்செல் ஸ்டார்க், மத்தேயு வேட்.