தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வரலாற்றை மாற்றவுள்ள ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர்..! - jerrsy

லண்டன்: ஆஸ்திரேலியா- இங்கிலாந்துக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 140 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றை ஐசிசி மாற்றவுள்ளது.

ashes-test-cricket-series-to-change-history

By

Published : Jul 23, 2019, 7:23 PM IST

சுமார் 140 ஆண்டுகால வரலாற்றில் டெஸ்ட் எனப்படும் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தற்போதுள்ள ஒரு நாள், டி20 போட்டிகளின் முன்னோடியான டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றை வரும் ஆஷஸ் தொடரின் போது மாற்றவுள்ளது.

இதுவரை நாம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை வெள்ளை நிற ஜெர்சியில் வீரர்கள் விளையாடுவதை பார்த்து வந்தோம். அதில் அவர்கள் அணியும் ஜெர்சியில் அவர்களுடைய பெயரோ அல்லது அவர்களின் ஜெர்சி நம்பர்களோ இருக்காது. அவர்கள் விளையாடும் அணியின் பெயர்கூட அந்த ஜெர்சியில் சிறு எழுத்துகளாலே பொறிக்கபட்டிருக்கும். அந்த அணியின் ஸ்பான்சர்ஷிப் பெயர்களைக்கூட தெளிவாக குறிப்பிட மாட்டர்கள்.

புதிய டெஸ்ட் ஜெர்சியில் இங்கிலாந்தின் மொஹீன் அலி, ஸ்டுவர்ட் ப்ரோட்.

ஆனால், வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்க உள்ள ஆஷஸ் தொடர் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் 140 ஆண்டுகால வரலாறு மாற்றப்பட உள்ளது. முதன்முறையாக இந்தத் தொடரில் வீரர்கள் ஜெர்சியின் பின்புறம் அவர்களின் பெயர் மற்றும் ஜெர்சி எண் குறிப்பிடப்பட உள்ளது. இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இதுகுறித்த தகவல் இந்த வருட ஆரம்பத்தில் பரவிய நிலையில் தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details