தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இங்கிலாந்து அணிக்கு உதவும் அர்ஜுன் டெண்டுல்கர் - london

லண்டன்: உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் வலைப்பந்து வீச்சாளராக அர்ஜுன் டெண்டுல்கர் ஈடுபட்டுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு உதவும் அர்ஜுன் டெண்டுல்கர்

By

Published : Jun 25, 2019, 1:27 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் லீக் போட்டி இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுடனான இப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு உதவும் விதமாக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஈடுபட்டுள்ளார். ஆரஞ்சு நிற டீ ஷர்ட் அணிந்திருந்த அவர், இங்கிலாந்து அணியின் வலைப்பயிற்சியின்போது, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீச்சு செய்தார்.

இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடிய ஆறு போட்டிகளில் நான்கு வெற்றி, இரண்டு தோல்வி என எட்டுப் புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மறுமுனையில், ஆஸ்திரேலிய அணி ஆறு போட்டிகளில், ஐந்து வெற்றி, ஒரு தோல்வி என 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் சமீபகாலமாக நல்ல ஃபார்மில் இருப்பதால் நிச்சயம் இப்போட்டி அனல் பறக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details