ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து மகளிர் அணி, மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று (செப்.27) நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி, எதிரணியின் பந்துவீச்சைத் சமாளிக்க முடியாமல் அடுத்தது விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சட்டர்த்வெய்ட் 30 ரன்களை எடுத்திருந்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் டெலிசா கிம்மின்ஸ், ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய மகளிர் அணி, 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்த அணியில் ரேச்சல் ஹெய்ன்ஸ் 40 ரன்களையும், அலிஸா ஹீலி 33 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.