அகமதாபாத்தின் மொடீராவில் 110,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு உலகின் மிகப்பெரிய மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிவடைய உள்ள நிலையில், ஐபிஎல் தொடருக்கான இறுதிப்போட்டி அம்மைதானத்தில் நடக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று ஐபிஎல் நிர்வாகக்குழு கூட்டம் டெல்லியில் கூடியது. அதில் ஐபிஎல் தொடருக்கான இறுதிக்கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. இதனால் இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளதாக அறியமுடிகிறது.
இதனிடையே அகமதாபாத் மைதானத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடத்துவதற்கான இறுதி முடிவு அடுத்த மாதம் தான் எடுக்கமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.