இந்திய கிரிக்கெட்டின் அணியின் கேப்டன் கோலி, மூன்று விதமான போட்டிகளிலும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். ஒருநாள், டெஸ்ட், டி20 என இரண்டு ஃபார்மெட்டிலும் கோலி 50-க்கும் அதிகமாக பேட்டிங் ஆவரேஜ் வைத்திருந்தார். இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் ரன் குவிப்பில் தடுமாறியதால், அவரது பேட்டிங் ஆவரேஜ் 50 லிருந்து 49ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து, இந்திய - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்றுவருகிறது.
இதில், முதல் டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நேற்று மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதில், 150 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் கோலி 52 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், மூன்று சிக்சர்கள் என 72 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.