தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டி20 உலக சாம்பியனை பழிக்கு பழிவாங்கிய கத்துக்குட்டி ஆப்கானிஸ்தான்..! - கரிம் ஜனத் பவுலிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றுள்ளது.

AA

By

Published : Nov 18, 2019, 3:49 AM IST

ஆப்கானிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள், மூன்று டி20, ஒரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இந்தியாவின் லக்னோ நகரில் நடைபெற்றுவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலிரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தன.

ரஹ்மனுல்லா குர்பஸ்

இந்நிலையில், இந்தத் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, விக்கெட் கீப்பர் ரஹ்மனுல்லா குர்பஸ் 79 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஷெல்டன் காட்ரெல், கீமோ பவுல், கெஸ்ரிக் வில்லியம்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதைத்தொடர்ந்து, 157 ரன்கள் இலக்குடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், அந்த அணி 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 127 ரன்களை மட்டுமே எடுத்தன. இதனால், ஆப்கானிஸ்தான் அணி இப்போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று, டி20 உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியை அப்செட் செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details