கிரிக்கெட் போட்டிகளில் அதிரடி என்றதும் அனைவரின் மனதிலும் முதலில் சட்டென எழும் பெயர் கிறிஸ் கெயில். இவர் 1999ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு அறிமுகமானார்.
அதிரடி வீரருக்காக காத்திருக்கும் சாதனை! - batesmen
தனது அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை இன்று நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் நிகழ்த்தவுள்ளார்.
அதிரடி வீரருக்காக காத்திருக்கும் சாதனை
இதுவரை இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக 299 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 25 சதங்கள், 53 அரைசதங்களை விளாசி 10 ஆயிரத்து 393 ரன்களை எடுத்துள்ளார்.
இவர் இந்திய அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் களமிறங்கும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையை படைப்பார். இதற்கு முன் அந்த அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா 299 ஒருநாள் போட்டிகளில் விளையாடிவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.