பிசிசிஐ அனைத்து பிரிவுகளுக்கும் 23 அம்ச நிகழ்ச்சி நிரலை வருடாந்திர பொதுக்கூட்டத்தின் 21 நாள்களுக்கு முன்னர் அனுப்பியுள்ளது. இந்த கூட்டமானது டிசம்பர் 24ஆம் தேதியன்று நடைபெறுகிறது.
நிகழ்ச்சி நிரலில் மிகவும் முக்கியமான அம்சம் என்னவென்றால், இரண்டு புதிய ஐபிஎல் அணிகளை இணைத்திட பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, குஜராத் தலைமையிடமாக வைத்து அணி உருவாகும் என கூறப்பட்டு வந்த நிலையில், மேலும் இன்னொரு அணி இணைக்கவுள்ளதான தகவல், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.