கிரிக்கெட் போட்டிகள் டெஸ்ட், ஒருநாள், டி20 என்ற பரிமாணங்களில் நடத்தப்பட்டுவந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டாக பத்து ஓவர்கள் மட்டுமே கொண்ட டி10 கிரிக்கெட் தொடர் அபுதாபியில் நடத்தப்படுகிறது. இந்த அபுதாபி டி10 கிரிக்கெட் தொடரின் மூன்றாவது சீசன் இன்று முதல் நவம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதனிடையே இந்தத் தொடருக்கான தொடக்க விழா அபுதாபியில் உள்ள சயத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலுமிருந்து வந்திருந்த பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி இதில் கலந்துகொண்டார். மேலும் பாகிஸ்தான் பாடகர் அடிஃப் அஸ்லாம், நடிகைகள் ரகுல் ப்ரீத் சிங், பார்வதி நாயர் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.