நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டி20, இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இத்தொடருக்கான பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி நியூசிலாந்திற்குச் சென்றடைந்தது.
இதையடுத்து அங்கு பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த வீரர்கள், அணி ஊழியர்களுக்கு கரோனா கண்டறிதல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச்சோதனையின் முடிவில் ஆறு வீரர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இத்தகவலை உறுதிப்படுத்தும் வகையில் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பங்கேற்பதற்கான பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த ஆறு வீரர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.