ஹைதராபாத் ராஜீவ்காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.
டெல்லி கேப்பிட்டல்ஸிடம் பணிந்த ஹைதரபாத் சன்ரைசஸை அணி! - சன்ரைசஸ் ஹைத்ரபாத்
ஹைதராபாத்: டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் கிரிகெட் போட்டியில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து டெல்லி அணியின் தொடக்க ஆட்டகாரர்களாக பிருத்வி ஷாவும், ஷிகார் தவானும் களமிறங்கினர். இவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய கோலின் மூர்னோ அதிரடியாக விளையாடி 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். அதற்கு அடுத்தாக களமிறங்கிய ஸ்ரேயர்ஸ் அய்யரும் தனது பங்குக்கு 45 ரன்கள் எடுத்தார். இதையடுத்து அந்த அணி 20 ஒவர்கள் முடிவில் 155 ரன்கள் எடுத்தது. சன்ரைசஸ் அணியில் அதிகபட்சமாக கலீல் அகமது நான்கு ஓவர்களை வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. ஹைதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 51 ரன்களும், ஜானி பேரிஸ்டோ 41 ரன்களும் எடுத்தனர். டெல்லி அணியை சேர்ந்த ரபாடா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.