தமிழ்நாடு

tamil nadu

அர்ஷ்தீப் சிங் குறித்த தகவலை மாற்றிய விக்கிபீடியாவுக்கு சம்மன்

By

Published : Sep 6, 2022, 10:54 AM IST

இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கை காலிஸ்தான் இயக்கத்தைச் சேர்ந்தவராக, விக்கிப்பீடியா பக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டதற்கு விளக்கமளிக்க கோரி, அந்நிறுவனத்திற்கு மத்திய அரசு சம்மன் அனுப்பியுள்ளது.

அர்ஷ்தீப் சிங்
அர்ஷ்தீப் சிங்

டெல்லி:ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் (செப். 5) இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. போட்டியின் முக்கியமான கட்டத்தில், இந்திய வேகப்பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங், ஆசிப் அலி கொடுத்த கேட்சை தவறவிட்டார்.

மேலும் இந்த போட்டியில், இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில், கேட்சை தவறவிட்ட அர்ஷ்தீப்பை சமூக வலைதளத்தில் பல்வேறு தரப்பிலான ரசிகர்கள் கடுமையாக சாடினர்.இதைத்தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங்கின் விக்கிப்பீடியா பக்கத்தில், அவர் காலிஸ்தான் இயக்கத்தை சேர்ந்த சீக்கியர் என தகவல் மாற்றப்பட்டது.

இந்நிலையில், அர்ஷ்தீப்பின் பக்கத்தில் மாற்றப்பட்டுள்ள தகவல் குறித்து விளக்கம் அளிக்கக் கோரி, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விக்கிப்பீடியாவின் அதிகாரிகளுக்கு சம்மன் அளித்துள்ளது.

இதுகுறித்து, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர், ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இதுபோன்ற தவறான தகவல்களையும், வேண்டுமென்றே தூண்டும் முயற்சிகளையும் அனுமதிக்க முடியாது. பாதுகாப்பான மற்றும் நம்பகமான இணையத்தை அளிக்கும் அரசின் கொள்கைக்கு இது எதிரானது" என பதிவிட்டுள்ளார்.

கோடிக்கணக்கான நபர்கள் வாசிக்கும் விக்கிபீடியாவில் இதுபோன்ற நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலான பொய் தகவல்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதுபோன்ற பொய் தகவல்களால் அர்ஷ்தீப்பின் குடும்பத்திற்கு அச்சுறுத்தலும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விக்கிப்பீடியா பக்கத்தில் யார் வேண்டுமானாலும் தகவலை சேர்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:"கேப்டன் பதவியிலிருந்து விலகியபோது, யாரும் என்னை அழைக்கவில்லை, ஒருவரிடமிருந்து மட்டுமே மெசேஜ் வந்தது"

ABOUT THE AUTHOR

...view details