நாடு முழுவதும் கரோனா தொற்றின் 2ஆவது அலை வேகமாகப் பரவிவருகிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் சிகிச்சை பலனின்றி, ஆக்ஸிஜன் தட்டுபாட்டால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
இந்தியாவிற்கு கரோனா தடுப்பு நிவாரண நிதி வழங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா
சிட்னி: கரோனா தடுப்பு நிவாரணப் பணிகளுக்காக இந்தியாவிற்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு ரூ. 29 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.
நேற்று மட்டும் (மே 2) கரோனா தொற்று காரணமாக 3 ஆயிரத்து 689 பேர் பலியாகினர். ஒரே நாளில் 3 லட்சத்து 92 ஆயிரம் பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏறப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், கிரிக்கெட் ஆஸ்திலியா அமைப்பு இந்தியாவில் கரோனா தடுப்பு நிவாரண நிதியாக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலரை வழங்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் கிட்டதட்ட ரூ. 29 லட்சம். இந்த தொகையௌ யுனிசெஃப் ஆஸ்திரேலியா அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், " இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கிரிக்கெட் உள்பட பல்வேறு விவகாரங்களில் பரஸ்பர பினைப்பை கொண்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரசின் இரண்டாவது அலையால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது எங்களுக்கு கடும் வேதனையை அளித்துள்ளது. என குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கமின்ஸ், பிரெட் லீ ஆகியோர் இந்தியாவிற்கு கரோனா தடுப்பு நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.