நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் பார்டர் கவாஸ்கர் டிராபி(border gavaskar trophy) முதல் டெஸ்ட் போட்டி இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக லம்புஷேன் 49 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 37 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா 5, அஷ்வின் 3 விக்கெட்கள் கைப்பற்றினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் 20 ரன்களில் அவுட்டானார். மூன்றாவது வீரராக களமிறங்கிய அஷ்வின், லயன் ஓவரில் சிக்சர் அடித்தார். 62 பந்துகளில் 23 ரன்கள் எடுத்த அஷ்வின் டாட் மர்பி பந்தில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டானார்.
இதனை தொடர்ந்து களமிறங்கிய புஜாரா 7 ரன்களில் மர்பி பந்துவீச்சில் ஸ்விப் ஷாட் ஆட முயன்று அவுட்டானார். வந்த வேகத்தில் பவுண்டரிகளாக அடித்து அதிரடி காட்டிய விராட் கோலி மர்பி பந்தில் கேரியிடம் கேட்ச் கொடுத்து 12 ரன்களில் அவுட்டானார். சூர்யகுமார் யாதவ் லியான் பந்துவீச்சில் 8 ரன்களுக்கு அவுட்டாக இந்திய அணி 168 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது.
பின்னர் களமிறங்கிய ஜடேஜா அதிரடியாக ஆடினார். மறுபக்கம் நிதான ஆட்டம் ஆடிய ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 9வது சதத்தை அடித்தார். கம்மின்ஸ் வீசிய 81வது ஓவரில் ரோஹித் கொடுத்த கேட்ச்சை ஸ்மித் தவறவிட்டார். இருப்பினும் அடுத்த பந்தில் போல்டானார். ரோஹித் சர்மா 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்தார். 6வது விக்கெட்டுக்கு ரோஹித் ஜடேஜா ஜோடி 61 ரன்கள் சேர்த்தது.
பின்னர் களமிறங்கிய பரத் 8 ரன்களில் அவுட்டானார். 240 ரன்களுக்கு 7 விக்கெட் என இருந்த நிலையில் அக்சர் பட்டேல் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக ஆடினார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை பவுண்டரிகளாக சிதறடித்தது. இந்நிலையில் ஜடேஜா மர்பி பந்துவீச்சில் போல்டானார்.
பின்னர் களமிறங்கிய முகமது ஷமி ஆஸ்திரேலிய பந்துவிச்சை சிக்ஸர்களாக பறக்கவிட்டார். மர்பி பந்தில் தொடர்ந்து சிக்ஸர்கள் அடித்த ஷமி அவரது ஓவரில் கேரியிடம் கேட்ச் கொடுத்து 37 ரன்களில் அவுட்டானார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய அக்சர் பட்டேல் 84 ரன்களில் அவுட்டானார். இறுதியில் இந்திய அணி 400 ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா சார்பில் பந்துவீச்சாளர் டாட் மர்பி அதிகபட்சமாக 7 விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: Rishabh pant: "முன் செல்லடா, முன்னே செல்லடா" மீண்டு வந்த ரிஷப் பண்ட் புகைப்படம்!