ஆக்லாந்து: இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகளில் கொண்ட டி20 தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து ஒருநாள் போட்டியில் விளையாடிவருகிறது. அந்த வகையில், முதலாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று (நவம்பர் 25) நடந்தது. முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய இந்திய பேட்டர்கள் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்களை எடுத்தனர். அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களையும், ஷிகர் தவான் 72 ரன்களையும், சுப்மான் கில் 50 ரன்களையும் எடுத்தனர். மறுப்புறம் பந்துவீச்சில் நியூசிலாந்து அணியின் டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன் தலா 3 விக்கெட்டுகளையும், ஆடம் மில்னே 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
அந்த வகையில், 307 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து பேட்டர்கள் களமிறங்கினர். ஆரம்பத்தில் ஃபின் ஆலன், டெவோன் கான்வே முறையே 22, 24 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாதம் அபாரா ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வில்லியம்சன் 98 பந்துகளுக்கு 94 ரன்களையும், லாதம் 104 பந்துகளுக்கு 145 ரன்களையும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர்.
மொத்தமாக 47.1 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பு 309 ரன்களை எடுத்து முதல்போட்டியில் வெற்றி பெற்றனர். மறுப்புறம் பந்துவீச்சில் உம்ரான் மாலிக் 2 விக்கெட்டுகளையும், ஷர்துல் தாக்கூர் 1 விக்கெட்டையும் எடுத்தனர். டி20 தொடரை இந்தியா கைப்பற்றியதால் அதிருப்தியடைந்த நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்கள் ஒருநாள் போட்டியின் வெற்றியை கொண்டாடிவருகின்றனர்.
இதையும் படிங்க:பிஃபா உலக கோப்பை; கேமரூனை வீழ்த்திய சுவிட்சர்லாந்து