ஐதராபாத் :காயம் காரணமாக நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து வங்கதேசம் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் விலகினார். இடது ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷகிப் அல் ஹசன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் நாட்டின் பல்வேறு நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து உள்ளிட்ட 10 அணிகள் விளையாடி வருகின்றன.
லீக் சுற்று ஆட்டங்களில் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் போராடி வருகின்றன. இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடி அதில் இரண்டில் மற்றும் வஙக்தேசம் அணி வெற்றி பெற்று உள்ளது.
ஏறத்தாழ, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட வங்கதேசம் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் நவம்பர் 11ஆம் தேதி முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இந்நிலையில், காயம் காரணமாக வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன், நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இடது கை ஆள்காட்டி விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை அணிக்கு எதிராக நேற்று (நவ. 6) நடந்த லீக் ஆட்டத்தின் போது ஷகிப் அல் ஹசனுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆட்டம் முடிந்த பிறகு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது இடது கை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆட்டத்தின் போது அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் இருப்பினும் வலி நிவாரணிகள் எடுத்துக் கொண்டு ஷகிப் அல் ஹசன் தொடர்ந்து விளையாடியதாகவும் வங்கதேசம் அணியின் பிசியோதெரபிஸ்ட் பேஜெத்துல் இஸ்லாம் தெரிவித்து உள்ளார்.
ஆட்டம் முடிந்ததும் அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததாகவும், காயத்தில் இருந்து அவர் குணமுடைய மூன்று முதல் நான்கு வாரங்கள் வரை ஆகலாம் என்றும் வங்கதேசம் அணியின் பிசியோ தெரிவித்து உள்ளார். இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 65 பந்துகளில் 82 அடித்த ஷகிப் அல் ஹசன், பந்துவீச்சிலும் 57 ரன்கள் விட்டுக் கொடுத்து இலங்கை அணியின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், காயம் காரணமாக அவர் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தின் வங்கதேச அணியை வழிநடத்துச் செல்பவர் குறித்து அந்த அணி நிர்வாகம் எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :England Vs Netherland : புள்ளி பட்டியலில் கடைசி இடம் யாருக்கு?.. இங்கிலாந்து - நெதர்லாந்து மோதல்!