ஐதராபாத் :உலக கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்வியை அடுத்து பாகிஸ்தான் அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்து உள்ளார்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்கு பின்னர் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இந்தியா வந்தது.
லீக் சுற்று ஆட்டங்களில் பெரிய அளவில் சோபிக்காத பாகிஸ்தான் அணி விளையாடிய 9 ஆட்டங்களில் 4 வெற்றி 5 தோல்வி கண்டு புள்ளிப் பட்டியலில் 5வது இடத்திற்கு இறங்கி நாக் அவுட் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது. இந்நிலையில், அனைத்து வடிவிலான பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக பாபர் அசாம் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து பாபர் அசாம் தனது எக்ஸ் பக்கத்தில், "கடந்த 2019ம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் என்னை பாகிஸ்தான் அணியை வழிநடத்துமாறு அழைத்தது முதல் கடந்த நான்கு ஆண்டுகளில், நான் பல ஏற்றங்களையும், சறுக்கல்களையும் அனுபவமாக கடந்துள்ளேன். ஆனால், நான் என் முழு மனதுடன், ஆர்வத்துடன் பாகிஸ்தான் அணியின் பெருமையை கிரிக்கெட் உலகில் தொடரச் செய்துள்ளேன்.