பர்மிங்காம்: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் விளையாடுகிறது. முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கினை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட் சதத்துடன் இங்கிலாந்து அணி 393 ரன்களுக்கு 8 விக்கெட்களை இழந்திருந்த நிலையில் டிக்ளேர் செய்தது.
ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 386 ரன்கள் எடுத்தது. 7 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவின் அபார பவுலிங்கில் 273 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 282 என்ற எளிதான இலக்கை சேஸ் செய்த ஆஸ்திரேலியா நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது.
பின்னர் ஆஸ்திரேலியா பவுலர் ஸ்காட் போலாண்ட் நைட் வாட்ச்மேனாக களமிறங்கினார். போலாண்ட் தன் பங்கிற்கு 20 ரன்கள் எடுத்து பிராட் பந்தில் அவுட்டானார். கடைசி நாள் ஆட்டத்தில் உஸ்மான் கவாஜா விக்கெட்டை முக்கிய விக்கெட்டாக கருதியது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த கவாஜா இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்தார். வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த டிராவிஸ் ஹெட் 16 ரன்களுக்கு அவுட்டானார்.
பின்னர் களமிறங்கிய கிரீன் 28 ரன்களுக்கு ராபின்சன் வீசிய லெங்க்த் பாலில் அவுட்டானார். ஆஸ்திரேலியாவிற்கு நம்பிக்கை தூணாக நின்ற உஸ்மான் கவாஜா இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார். ஆனால் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கையை ஸ்டோக்ஸ் தகர்த்து எறிந்தார். கவாஜா ஸ்டோக்ஸ் வீசிய லெக் கட்டர் பந்தில் 65 ரன்களுக்கு போல்டானார்.