அகமதாபாத்:இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 15ஆவது சீசன் இந்தாண்டு மார்ச் மாதம் தொடங்கும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த சீசனில் லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் புதிதாக களமிறங்க உள்ளன.
அதன்படி மொத்தம் பத்து அணிகள் ஐபிஎல் 2022இல் இடம்பெற்றுள்ளன. போட்டிகளின் எண்ணிக்கை 74ஆக உயர்த்தப்பட்டுள்ளது. லக்னோ அணியை ஆர்பி சஞ்சீவ் கோயங்கா குழுமமும், அகமதாபாத் அணியை சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனமும் பெரும் தொகைக்கு வாங்கியுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் அகமதாபாத் அணிக்கு, அகமதாபாத் டைடன்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகின. இருப்பினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகமல் இருந்தது. இதனிடையே இன்று(பிப்.9) சிவிசி கேபிடள் பார்ட்னர்ஸ் நிறுவனம் அகமதாபாத் அணிக்கு குஜராத் டைடன்ஸ் என்று பெயரிட்டுள்ளது.