தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் கரோலினா!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிச்சுற்று போட்டிக்கு ஸ்பெயின் நாட்டின் நட்சத்திர வீராங்கனை கரோலினா மரின் முன்னேறியுள்ளார்.

Watch: Carolina Marin marched to the finals of Thailand Open
Watch: Carolina Marin marched to the finals of Thailand Open

By

Published : Jan 17, 2021, 6:51 AM IST

தாய்லாந்தில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேற்று (ஜன.16) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரின் - தென் கொரியாவின் அன் சி யங்குடன் மோதினார்.

பரபரப்பான இப்போட்டியின் தொடக்கம் முதலே அபார ஆட்டத்தை வெளிப்படித்திய கரோலினா 21-18, 21-16 என்ற நேர் செட் கணக்கில் அன் சி யங்கை வீழ்த்தி, வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் கரோலினா மரின் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றுக்குள் நுழைந்தார். இன்று (ஜன.17) நடைபெறும் இறுதிப்போட்டியில் கரோலினா மரின், உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான சீனாவின் தாய் ஜூ யிங்கை எதிர்கொள்ள இருக்கிறார்.

தாய்லாந்து ஓபன்

அதேசமயம் இத்தொடரின் ஆடவர் ஒற்றயர் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் டென்மார்க் நட்சத்திர வீரர் விக்டர் ஆக்செல்சன், ஹாங்காங்கின் என்.ஜி. கா லாங் அங்கஸை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: IND vs AUS: தொடக்க வீரர்கள் ஏமாற்றம் ; மழையால் தப்பித்த இந்தியா!

ABOUT THE AUTHOR

...view details