தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று (ஜன.23) நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் ஸ்பெயினின் கரோலினா மரின் - கொரியாவின் அன் சே யங்கை எதிர்கொண்டார்.
பரபரப்பான இப்போட்டியின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கரோலினா முதல் செட்டை 21-19 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-15 என்ற கணக்கிலும் கைப்பற்றி சே யங்கிற்கு அதிர்ச்சியளித்தார்.