2020ஆம் ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் லண்டனில் நடந்துவந்தது. இதன் ஆடவர் பிரிவுக்கான இறுதிப்போட்டிக்கு முன்னாள் உலக சாம்பியன் விக்டர் ஆக்செல்சன் முன்னேறினார். இவரை எதிர்த்து ஆல் இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை இருமுறை கைப்பற்றிய தைவானின் டை சூ யிங் ஆடினார்.
இதில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய விக்டர் 21-13, 21-14 என இரு செட்களையும் அடுத்தடுத்து கைப்பற்றினார். இது விக்டர் கைப்பற்றும் முதல் ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் தொடராகும்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பட்டத்தை வென்ற விக்டர் ஆக்செல்சன்
இதேபோல் மகளிர் பிரிவில் தொடர்ந்து நான்காவது முறையாக சீனாவின் டை சூ யிங் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இவரை எதிர்த்து விளையாடுவதற்கு சகநாட்டு வீராங்கனையான சென் யூபெய் தகுதிப்பெற்றார்.
மிகவும் விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் சென் யூபெய் 21-19, 21-15 என இரண்டு செட்களையும் கைப்பற்றி ஆல் இங்கிலாந்து ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை மூன்றாவது முறையாகக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதியில் சிந்து தோல்வி