2019ஆம் ஆண்டுக்கான இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடர் டெல்லியில் நடைபெற்றது. இதில், நேற்று நடைபெற்ற ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதி சுற்றில், இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்க் நாட்டை சேர்ந்த விக்டர் அக்செல்சென்னை எதிர்கொண்டார்.
பேட்மிண்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட ஸ்ரீகாந்த்! - கிதாம்பி ஸ்ரீகாந்த்
டெல்லி: இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரின், ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், டென்மார்கின் விக்டர் அக்செல்சென்னிடம் தோல்வி அடைந்தார்.
சாம்பயின் பட்டத்தை நழுவ விட்டார் ஸ்ரீகாந்த்
முதல் செட்டில், மிகவும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரீகாந்த் 7-21 என்ற கணக்கில் அந்த செட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற இரண்டாவது செட்டில் ஸ்ரீகாந்த் 20-22 என்ற கணக்கில் போராடி தோல்வி அடைந்தார். இதன் மூலம், விக்டர் அக்செல்சென் 21-7, 22-20 என்ற நேர் செட் கணக்கில் ஸ்ரீகாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
Last Updated : Apr 1, 2019, 12:38 PM IST