பாங்காக்கில் நடைபெற்றுவரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (ஜன.22) நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை - மலேசியாவின் பெங் சூன் சான், லி யிங் கோச் இணையை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் செட்டை பெங் சூன் இணை 21-18 என்ற கணக்கில் கைப்பற்றி அஸ்வினி பொன்னப்பா இணைக்கு அதிர்ச்சியளித்தது. இதையடுத்து இரண்டாவது செட்டில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வினி இணை 24-22 என்ற கணக்கில் செட்டை கைப்பற்றி தோல்வியை தவிர்த்தது.