தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று (ஜன.21) நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்று போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா - டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியாவின் சமீர் வெர்மா தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை 21 - 12 என்ற கணக்கிலும், இரண்டாவது செட்டை 21-09 என்ற கணக்கிலும் கைப்பற்றி ராஸ்மஸுக்கு அதிர்ச்சியளித்தார்.