தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: இரண்டாம் சுற்றோடு வெளியேறிய இந்திய இணை! - Doubles pair

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று போட்டியில் இந்தியாவின் ரங்கிரெட்டி - சிராக் செட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

Thailand Open: Doubles pair of Rankireddy, Shetty bow out
Thailand Open: Doubles pair of Rankireddy, Shetty bow out

By

Published : Jan 14, 2021, 2:28 PM IST

கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெறும் முதல் பேட்மிண்டன் தொடரான தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன், ஜனவரி 12இல் தொடங்கியது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணை - இந்தோனேசியாவின் முகமது அசன், ஹேந்திர செட்டியாவன் இணையுடன் மோதியது.

பரபரப்பான இப்போட்டியிம் தொடக்கம் முதலே அசன் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் மூலம் முதல் செட்டை 21-19 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய இணைக்கு அதிர்ச்சியளித்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்திலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அசன் இணை 21-17 என்ற கணக்கில் அதனையும் கைப்பற்றி அசத்தியது. இதன் மூலம் இந்தோனேசியாவின் முகமது அசன், ஹேந்திர செட்டியாவன் இணை 21-18, 21 -17 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ரங்கிரெட்டி, சிராக் ஷெட்டி இணையை வீழ்த்தியது.

இதனால் ரங்கிரெட்டி, சிராக் செட்டி இணை தாய்லாந்து ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவு இரண்டாம் சுற்றோடு தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க:IND vs AUS: பிரிஸ்பேன் டெஸ்ட்டிற்கு தயாராகும் ஆஸி

ABOUT THE AUTHOR

...view details