தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

காலிறுதிச் சுற்றில் கிதாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா! - கிதாம்பி ஸ்ரீகாந்த்

சையத் மோடி பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்களான கிதாம்பி ஸ்ரீகாந்த், சவுரப் வர்மா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.

srikanth verma
Syed modi

By

Published : Nov 28, 2019, 9:53 PM IST

இந்த ஆண்டுக்கான சையத் மோடி பேட்மிண்டன் தொடர் லக்னோவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டைச் சேர்ந்த பாருப்பள்ளி காஷ்யப்பை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஸ்ரீகாந்த், 18-21, 22-20, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில் அவர் தென் கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதவுள்ளார். அதேபோல் நடைபெற்ற மற்றொரு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சவுரப் வர்மா 21-11, 21-18 என்ற நேர் செட் சக வீரரான அலப் மிஷ்ராவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்துள்ளார். நாளை நடைபெறும் காலிறுதிச் சுற்றில் இவர், தாய்லாந்தைச் சேர்ந்த விடிட்சரனுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

முன்னதாக, இந்தத் தொடரின் இரண்டாவது சுற்றில் விளையாடிய மற்ற இந்திய வீரர்களான அஜய் ஜெயராம், லக்ஷயா சென், ஹெச்.எஸ். பிரனாய், சாய் பிரனீத் ஆகியோர் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருந்தனர்.

இதையும் படிங்க:பி.பி.எல். பேட்மிண்டன் - பி.வி. சிந்து ரூ. 77 லட்சத்திற்கு ஏலம்!

ABOUT THE AUTHOR

...view details