2019ஆம் ஆண்டுக்கான சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில், இந்தியாவின் சாய் பிரனீத்தை எதிர்த்து தரவரிசையில் இரண்டாம் இடம் இருக்கும் சீனாவின் ஷி யூகி விளையாடினார்.
பட்டத்தை தவறவிட்ட இந்தியாவின் சாய் பிரனீத்! - சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்
சீனா : சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவின் ஷி யூகியிடம் வீழ்ந்து பட்டத்தை வெல்லும் வாய்ப்பைத் இந்தியாவின் சாய் பிரனீத் தவறவிட்டார்.
இந்தியாவின் சாய் பிரனீத்
இந்நிலையில், முதல் சுற்றில் 21-19 எனக் கைப்பற்றிய சாய் பிரனீத், இரண்டாம் சுற்றில் ஷி யூகியின் ஆபாரமான ஆட்டத்தை எதிர்கொள்ள முடியாத சாய் 18-21 என தவறவிட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற மூன்றாவது சுற்றில், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷி யூகி 12-21 மூன்றாவது செட்டை கைப்பற்றி சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.