தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இந்தோனேஷியா பேட்மிண்டன்: முதல் சுற்றிலேயே நடையைக் கட்டிய  கிதாம்பி ஸ்ரீகாந்த்! - இந்தோனேஷிய பேட்மிண்டன் தொடர் 2020

இந்தோனேசிய பேட்மிண்டன் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றிலேயே இந்திய வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

Srikanth bows out of Indonesia Masters
Srikanth bows out of Indonesia Masters

By

Published : Jan 15, 2020, 1:56 PM IST

மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டனைத் தொடர்ந்து தற்போது இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடர் ஜகர்தாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்றுப் போட்டியில் உலகின் 12ஆம் நிலை வீரரான இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த், இந்தோனேசியாவைச் சேர்ந்த ருஸ்டாவிடோவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 21-18 என்ற கணக்கில் வென்ற ஸ்ரீகாந்த், இரண்டாவது செட்டை 12-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட் போட்டியில் ருஸ்டாவிடோவின் அதிரடி ஆட்டத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஸ்ரீகாந்த் 14-21 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம், கிதாம்பி ஸ்ரீகாந்த் 21-18, 12-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேபோல் நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரவுக்கான முதல் சுற்றில் இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி இணை 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தென்கொரியாவின் கோ சூங் ஹூன் - இயாம் ஹை வான் இணையிடம் தோல்வி அடைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் பி.வி. சிந்து, சாய்னா நேவால், சாய் பிரனீத் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் களமிறங்கவுள்ளனர்.

இதையும் படிங்க:விபத்தில் சிக்கிய உலகின் நம்பர் 1 பேட்மிண்டன் வீரர்; ஒருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details