2019ஆம் ஆண்டுக்கான சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி சிந்து-வை எதிர்த்து இந்தோனேஷியாவின் லானி அலெக்ஷாண்ட்ரா ஆடினார். இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய சிந்து 21-9, 21-7 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
இரண்டாம் சுற்றுக்கு முன்னேறிய இந்தியாவின் சிந்து, சாய்னா நேவால்! - badminton
சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் வெற்றிபெற்று இந்தியாவின் சிந்து, சாய்னா நேவால் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
PV Sindhu
அதேபோல் மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நேவாலை எதிர்த்து இந்தோனேஷிய வீராங்கனை யுலியா யோஸ்பின் ஆடினார். அதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட சாய்னா, 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இரண்டாம் சுற்று ஆட்டத்தில் சிந்து டென்மார்க் வீராங்கனை மியா பிளைசெஃபுடன் மோதுகிறார். அதேபோல் சாய்னா தாய்லாந்து வீராங்கனை சோசுவாங்கை எதிர்த்து ஆடுகிறார்.