தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#FrenchOpen2019: காலிறுதியுடன் திரும்பிய உலக சாம்பியன்! - காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரங்கனை பி.வி.சிந்து தோல்வி

பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பி.வி. சிந்து தோல்வியைத் தழுவினார்.

PV Sindhu knocked out

By

Published : Oct 26, 2019, 2:56 PM IST

FrenchOpen2019: ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தத் தொடரில் மகளில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி. சிந்து தைவானின் தை சூ யிங்கை எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிந்து முதல் செட் கணக்கை 21-16 என்ற கணக்கில் தை சூ யிங்கிடமிருந்து கைப்பற்றினார். ஆனால் அதனைத் தொடர்ந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தை சூ 26-24 என்ற கணக்கில் சிந்துவிடமிருந்து கைப்பற்றினார்.

அதன் பின்னும் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்த தை சூ மூன்றாவது செட்டை 21-17 என்ற கணக்கில் சிந்துவை வீழ்த்தி பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.

இத்தோல்வியின் மூலம் உலகச் சாம்பியனான பி.வி. சிந்து பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பிரஞ்சு ஓபன் பேட்மிண்டன் அரையிறுதியில் இந்திய வீரர்கள்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details