சீன ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடர் சீனாவின் ஃபுஷோ நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப், தாய்லாந்து வீரர் சித்திக்கோம் தம்மாசின் ஆகியோர் மோதினர்.
சீன ஓபன் பேட்மிண்டன் - மனைவி சாய்னா வெளியே கணவர் காஷ்யப் உள்ளே! - சீன ஓபன் சூப்பர்750 பேட்மிண்டன்
சீன ஓபன் சூப்பர்750 பேட்மிண்டன் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்திய வீரர் பாருப்பள்ளி காஷ்யப் முன்னேறியுள்ளார்.
இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாருப்பள்ளி காஷ்யப் 21-14, 21-13 என்ற செட் கணக்கில் தாய்லாந்து வீரரை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மகளிர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்றுப்போட்டியில் கய் யான்யானிடம் 9-21, 12-21 என்ற கணக்கில் தோல்வியுற்று தொடரிலிருந்து வெளியேறினார்.
ஆனால் சாய்னாவின் கணவரான பாருப்பள்ளி காஷ்யப் அடுத்த சுற்றுக்கு முன்னேறி இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் இந்தோனேசிய வீரர் டாமி சுகியார்டோவை வீழ்த்தி இந்திய வீரர் சாய் பிரனீத் இரண்டாவது சுற்றுக்குள் காலடி வைத்துள்ளார்.