2019ஆம் ஆண்டுக்கான உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடர் சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டிக்கு தரவரிசையில் 19ஆவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் தகுதி பெற்றதால், பதக்கத்தை உறுதி செய்தார்.
#bwfworldchampionship: வெண்கலம் வென்ற இரண்டாவது இந்தியர்... - உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 36 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை இந்திய வீரர் சாய் பிரனீத் படைத்துள்ளார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் அவர், ஜப்பான் வீரரும், முதல்நிலை வீரருமான கென்டோ மோமோடாவை (Kento Momata) எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், சாய் பிரனீத் 13-21, 8-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால், இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம், 1983க்கு பிறகு இந்தத் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக, இந்திய பேட்மிண்டன் முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோன் 1983இல் வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.