தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மலேசிய மாஸ்டர்ஸ் தொடரில் தகுதிபெறும் வாய்ப்பைத் தவறவிட்ட லக்ஷ்யா சென்! - பேட்மிண்டன் செய்திகள்

மலேசிய மாஸ்டர்ல் தொடரில் பங்கேற்பதற்காக நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்திய இளம் வீரர் லக்‌ஷ்யா சென் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

Lakshya sen
Lakshya sen

By

Published : Jan 7, 2020, 7:04 PM IST

நடப்பு ஆண்டுக்கான முதல் பேட்மிண்டன் தொடரான மலேசியா மாஸ்டர்ஸ் தொடர் கோலாலம்பூரில் இன்று தொடங்கியது. இந்நிலையில், இந்தத் தொடரின் பிரதான சுற்றுக்கு முன்னேறுவதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் இன்று நடைபெற்றன.

இதில், நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் லக்ஷ்யா சென், டென்மார்க்கின் ஹன்ஸ் கிறிஸ்டியனை எதிர்கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் லக்‌ஷ்யா சென் 11-21, 21-18, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்ததால் தொடரிலிருந்து வெளியேறினார்.

இதேபோல் நடைபெற்ற மற்றொரு ஆடவர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் ஷுபங்கர் தே 15-21, 15-21 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் லியூ டாரேனிடம் தோல்வி அடைந்தார்.

இதையும் படிங்க:ஆள விடுங்கடா சாமி... ட்விட்டரிலிருந்து விலகிய ஆஸி. வீரர்!

ABOUT THE AUTHOR

...view details