சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரான ஜப்பானின் கெண்டோ மொமொடாவை எதிர்த்து ஆறாம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் களமிறங்கினார். முன்னணி வீரர்கள் மோதியதால் இந்த ஆட்டத்துக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த ஆட்டத்தின் முதல் செட்டை கெண்டோ மொமொடா 21-18 எனக் கைப்பற்ற, இரண்டாம் செட்டை இந்தியாவின் ஸ்ரீகாந்த் 19-21 எனப் போராடி கைப்பற்றினார். இதனையடுத்து முதல் நிலை வீரர் மொமொடா, தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இதனை தாக்குபிடிக்க முடியாமல் ஸ்ரீகாந்த் திணறினார். இதனால் மொமொடா மூன்றாவது செட்டை 21-9 என அபாரமாகக் கைப்பற்றி அரையிறுதிக்கு முன்னேறினார்.