தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தாய்லாந்து ஓபன்: சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்திய ஜோடி - Satwiksairaj Sink Reddy / Chirag Shetty

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சாம்பியன் பட்டத்தை வெல்லுமா இந்திய ஜோடி

By

Published : Aug 4, 2019, 11:47 AM IST

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடர் அந்நாட்டு தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் கிதாம்பி ஸ்ரீகாந்த், சாய் பிரனீத், மகளிர் பிரிவில் சாய்னா நேவால் ஆகியோர் சொதப்பினர். இருப்பினும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பாக விளையாடிவருகிறது.

நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்த ஜோடி, தென் கொரியாவின் கோ சங் ஹையுன் / ஷின் பேக் செயோல் (ko Sung Hyun / Shin Baek Cheol) இணையை எதிர்கொண்டது. இதில், சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி 22-20, 22-24, 21-9 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதைத்தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சத்விக் சாய்ராஜ் ரான்கிரெட்டி / சிராக் ஷெட்டி ஜோடி சீனாவின் லி ஜூன்ஹுய் / லியு யுச்சென் (Li Junhui / Liu Yuchen) இணையை எதிர்கொள்கிறது. இதில், இந்திய ஜோடி வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details