ஃபிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிசில் பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதனிடையே நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா ஹாங்காங் வீராங்கனை சியூங் யான் யியை எதிர்கொண்டார்.
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் - இரண்டாவாது சுற்றில் சாய்னா நேவால் - பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரின் முதல் சுற்றுப்போட்டியில் ஹாங்காங் வீராங்கனையை நேர் செட்களில் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
saina nehwal
இதில் முதல் செட்டிலிருந்தே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா யான்-யியை 23-21, 21-17 என்ற நேர் செட்களில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்குள் நுழைந்துள்ளார். இதேபோன்று மற்றொரு போட்டியில் கனடாவின் மிச்சல் லி இன்னை வீழ்த்திய இந்திய வீராங்கனை பி.வி. சிந்துவும் இரண்டாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
Last Updated : Oct 26, 2019, 7:45 PM IST