32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வரும் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 வரை நடைபெறவுள்ளது. கடந்த முறை பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து இம்முறை தங்கம் வெல்வாரா என்பதே ஒட்டுமொத்த நாட்டின் எதிர்பார்ப்பாக உள்ளது.
24 வயதான இவர், தற்போது மகளிர் ஒற்றையர் பிரிவு தரவரிசைப் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறார். 2016 ஒலிம்பிக்கைத் தவிர்த்து 2017, 2018 உலக பேட்மிண்டன் என தொடர்ந்து மூன்று தொடர்களில் வெள்ளிப் பதக்கம் வென்ற இவர், கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்தின் பசெல் நகரில் நடைபெற்ற உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனை படைத்தார்.
பேட்மிண்டனில் சிறந்து விளங்குவதால் இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு சார்பில் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்று வரும் பேட்மிண்டன் ப்ரீமியர் லீக் தொடரில் இவர் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருகிறார்.
இந்நிலையில், இவர், ஹைதராபாத் அணியின் உரிமையாளர் டாக்டர். வி.கே. ராவ் ஆகியோருடன் ராமோஜி ஃப்லிம் சிட்டியில் உள்ள நமது ஈடிவி பாரத் அலுவலத்திற்கு வருகை புரிந்தார். அவரிடம், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்தும், மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்பு குறித்தும் அவர் நமது ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியளில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கேள்வி: 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றபோது நீங்கள் ஒரு மாதத்திற்கு உங்களது மொபைல் ஃபோனை பயன்படுத்தாமல் இருந்தீர்கள் என உங்களது பயிற்சியாளர் கோபிசந்த் தெரிவித்தார். மொபைல் போன் பயன்படுத்தாமல் இருந்தது உங்களுக்கு கடினமாக இருந்ததா?
பதில்:நிச்சயம் இல்லை. ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்னரே இரண்டு மாதங்களுக்கு நான் மொபைல் போன் பயன்படுத்தாமல் எனது ஆட்டத்தில்தான் கவனம் செலுத்தினேன்.இதனால், மொபைல் போன் இல்லாமல் இருந்தது போரிங்காக நான் உணரவில்லை.
பேட்மிண்டனில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற குறிக்கோள் எனக்கு எப்போதும் இருக்கிறது.நீங்கள் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்றால் ஒரு சில விஷயத்தை தியாகம் செய்துதான் ஆக வேண்டும். இறுதியில் அந்த தொடரில் நான் வெள்ளிப்பதக்கம் வென்றது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
கேள்வி: டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு எப்படி தயாராகுரீங்கள்?