தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: அரையிறுதியில் சிந்து - பி.வி. சிந்து

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்னை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.

Defending champion PV Sindhu reaches semi-finals of All England Open
Defending champion PV Sindhu reaches semi-finals of All England Open

By

Published : Mar 20, 2021, 9:06 AM IST

பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையானஅகானே யமகுச்சியை எதிர்கொண்டார்.

இப்போட்டியின் முதல் செட்டை யமகுச்சி 21-16 என்ற கணக்கில் கைப்பற்றினார். அதன்பின் சுதாரித்து விளையாடிய பி.வி. சிந்து 21-16, 21-19 என்ற கணக்கில் அடுத்தடுத்த செட்களை கைப்பற்றி அசத்தினார்.

ஒரு மணி நேரம் 16 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முடிவில் பி.வி. சிந்து 16-21, 21-16, 21-19 என்ற செட் கணக்கில் ஜப்பானின் யமகுச்சியை வீழ்த்தி ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.

இதையும் படிங்க:முதல் டி20 போட்டியிலிருந்து ஹர்மன்பிரீத் விலகல்

ABOUT THE AUTHOR

...view details