இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்ற ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் முடிவடைந்த நிலையில், அதில் பங்கேற்ற தைவான் அணியின் மாற்று வீரர் ஒருவருக்கு கோவிட்-19 பெருந்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக டென்மார்க் பேட்மிண்டன் வீரர் ஹான்ஸ்-கிறிஸ்டியன் விட்டிங்கஸ் (Hans-Kristian Vittinghus) நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இது குறித்து அவரது ட்விட்டர் பதிவில், அந்த வீரர் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் தொடரின்போது தைவான் அணியின் மாற்று வீரராக இருந்ததாகவும், அவர் மாற்ற வீரர்களுடன் உணவகத்துக்கும் அரங்கிற்கும் இடையிலான பேருந்து பயணத்தில் இருந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் இத்தகவலைத் தனது ட்விட்டர் பதிவில் இணைந்து, இது எனக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கிறது எனப் பதிவிட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து இந்திய வீரர்களான பாருப்பள்ளி காஷ்யப், அஜய் ஜெயராமன், அஸ்வினி பொன்னப்பா ஆகியோரும் தங்களது பதிவுகளைவும் வெளியிட்டுள்ளனர்.