சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது. இதன் விளைவாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், பேட்மிண்டன் வீரர்களின் பாதுகாப்பை நலன் கருதி மார்ச் 16 முதல் ஏப்ரல் 12 வரை நடைபெறவுள்ள பேட்மிண்டன் தொடர்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இந்த முடிவால் சுவிஸ் ஓபன், இந்தியா ஓபன், ஆர்லியன் ஓபன், மலேசிய ஓபன், சிங்கப்பூர் ஓபன் ஆகிய ஐந்து தொடர்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளன.