தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆல் இங்கிலாந்து ஓபன்: காலிறுதிச்சுற்றில் வெளியேறிய இந்திய இணை - அஸ்வினி பொண்ணப்பா

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.

All England: Lakshya Sen crashes out after Ashwini-Sikki pair's loss in quarters
All England: Lakshya Sen crashes out after Ashwini-Sikki pair's loss in quarters

By

Published : Mar 20, 2021, 8:26 AM IST

சர்வதேச பேட்மிண்டன் கூட்டமைப்பால் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் நடப்பாண்டு சீசன் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றுவருகிறது.

இதில் நேற்று(மார்ச் 19) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதிச்சுற்றில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, நெதர்லாந்தின் செரில் சீனென் - செலினா பீக் இணையுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து இணை முதல் செட்டை 24-22 என்ற கணக்கில் போராடி வென்றது. இதையடுத்து நடைபெற்ற இரண்டாம் செட் ஆட்டத்தில் அபாரமாக விளையாடிய இந்த இணை 21-12 என்ற கணக்கில் செட்டைக் கைப்பற்றி இந்திய இணைக்கு அதிர்ச்சியளித்தது.

இதன்மூலம் நெதர்லாந்து இணை 24-22, 21-12 என்ற நேர் செட் கணக்கில் இந்திய இணையை வீழ்த்தி அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியது. இத்தோல்வியின் மூலம் இந்திய மகளிர் இணை ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரிலிருந்து வெளியேறியது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் - ஐசிசி உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details