தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை இறுதியில் தீபா கர்மாகர்! - தீபா கர்மாகர்

ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக் கோப்பையின் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர்.

ஜிம்னாஸ்டிக்ஸ் உலகக்கோப்பை இறுதியில் தீபா

By

Published : Mar 15, 2019, 1:38 PM IST

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் நான்காவது இடம்பிடித்து சாதனை படைத்தவர் தீபா கர்மாகர்.

இவர் அஸர்பைஜானில் நடைபெறும் ஆர்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியின் தகுதி சுற்று போட்டிகளில் பங்கேற்று வந்தார். இந்த தகுதி சுற்றில், 14.466 மற்றும் 14.133 ஆகிய புள்ளிகளைப் பெற்று சராசரியாக 14.299 சதவிகிதத்தை பெற்றுள்ளார்.

இந்த தகுதி சுற்றில் முதல் எட்டு இடங்களுக்குள் இடம்பிடித்ததால் ஆர்டிஸ்டிக்ஸ் உலகக்கோப்பை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

மேலும், கடந்த நவம்பர் மாதம் ஜெர்மனியில் நடைபெற்ற உலகக்கோப்பையில் வெண்கலம் வெற்றதால் இந்த வருடமும் தங்கப் பதக்கம் வென்று அசத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details