தமிழ்நாட்டில் ஒரு பண்டிகை வந்துவிட்டால் தொலைக்காட்சிகளில் புதுப் படங்கள் ஒளிபரப்புவது வழக்கம். அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சிகளில் தொடர்ச்சியாக புதிய படங்கள் ஒளிபரப்பாகின. அந்த வகையில் பேட்ட, விஸ்வாசம், பிகில், சங்கத்தமிழன், நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டன. தொடர்ந்து புதுப் படங்கள் என்பதால், ரசிகர்கள் எந்தப் படத்தை பார்ப்பது, எதை விடுவது என்று தெரியாமல் குழம்பி இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி பிரபல தொலைக்காட்சியில் விஸ்வாசம் திரைப்படம் ஒளிபரப்பானது. குடும்ப சென்டிமென்ட்டை அடிப்படியாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே திரையரங்கத்தில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யவுள்ளது என்று அறிவிக்கப்பட்டவுடனே, கண்டிப்பாக TRPயில் முதல் இடத்தை பிடிக்கும் என்றும் அஜித் ரசிகர்கள் உறுதியாக தெரிவித்தனர்.
அவர்கள் சொன்னது தற்போது உண்மையில், உறுதியானது. ஆம்... அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம், தொலைக்காட்சியில் அதிகமானோர்களால் பார்க்கப்பட்ட தென்னிந்திய படம் என்ற சாதனையைச் செய்துள்ளது.