தமிழில் பிரபல தனியார் சேனலில் ஒளிப்பரப்படும் முக்கிய ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று சூப்பர் சிங்கர். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு எண்ணற்ற ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்று, தனது குரல் வளத்தால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா.
மருத்துவப் பணியை தொடங்கிய சூப்பர் சிங்கர் பிரியங்கா! - சூப்பர் சிங்கர் பிரியங்கா
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் புகழ் பெற்ற பிரியங்கா, பல் மருத்துவ சேவையை தொடங்கியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், பிரியங்கா இறுதிப் போட்டியில் வெற்றி பெறவில்லை என்றாலும், மக்கள் மனங்களை வென்றார். அதனை தொடர்ந்து, ஏஆர் ரஹ்மான், இமான், ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்களி்ன் இசையில் பாடியுள்ளார்.
இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு பல் மருத்துவப்படிப்பில் பட்டம் பெற்ற அவர், கரோனா காரணமாக மருத்துவமனை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பல் மருத்துவமனை தொடங்கியுள்ள புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா பதிவிட்டுள்ளார். அதில் பல் மருத்துவ சேவையில் முதல் நாள் என்று குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.