சின்னத்திரை நடிகை சித்ரா தனியார் ஹோட்டலில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல்கள் வந்த நிலையில் அவரது தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் தனது மகளின் மரணம் குறித்து விளக்கம் கேட்க வந்தார்.
மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை - சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை
சென்னை: மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை கூறியுள்ளார்.
சித்ரா
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”எனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை. அவருக்கு மன உளைச்சல் இருப்பதாக என்னிடம் ஏதும் கூறவில்லை. அவர் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. காவல் துறையினர் தொடர்ந்து விசாரித்துவருகின்றனர். அவருக்கு பெற்றோர்களால்தான் பதிவு திருமணம் செய்துவைக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தலாம் என முடிவு செய்திருந்தோம்” என்றார்.